கிருஷ்ண ஜென்ம பூமி வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் அதிரடி Krishna Janma Bhoomi Case| Allahabad High Court
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் இந்து கடவுள் கிருஷ்ணர் பிறந்ததாக கருதப்படும் கிருஷ்ண ஜென்ம பூமியில் கிருஷ்ணர் கோயில், ஈத்கா மசூதி உள்ளன. கிருஷ்ண ஜென்ம பூமியில் இருந்த கோயிலை இடித்துவிட்டு, முகலாய மன்னன் அவுரங்கசீப் 1670களில் மசூதி கட்டியதாக இந்துக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, மதுரா கீழ்கோர்ட், மாவட்ட கோர்ட், அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தற்போது அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடக்கிறது. கிருஷ்ண ஜென்மபூமி வளாகத்தில் கிருஷ்ணர் கோயிலும், மசூதியும் அருகருகே அமைந்திருப்பதால், மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். அங்கு கிருஷ்ணர் கோயில் கட்ட வேண்டும் என, கிருஷ்ண ஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில் கோர்ட்டில் முறையிடப்பட்டது.