/ தினமலர் டிவி
/ பொது
/ 400 ஏக்கரில் நெற்பயிர்கள் அழுகியதால் விவசாயிகள் கண்ணீர் | Kumbakonam Rain | crop damage
400 ஏக்கரில் நெற்பயிர்கள் அழுகியதால் விவசாயிகள் கண்ணீர் | Kumbakonam Rain | crop damage
தஞ்சாவூர், பாபநாசம் தாலுகாவில் அகரமாங்குடி, சுரைக்காயூர், சித்தர்காடு உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. வடிகால்வாய்கள் தூர்வாரப்படாததால் வயல்களில் மழைநீர் தேங்கி நின்றது. சுமார் 400க்கு மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின. ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
அக் 24, 2025