ஆந்திரா பஸ் சம்பவ வீடியோவுக்கு பின்னால் பகீர் | Kurnool Bus Fire cctv video | Kurnool Bus incident
ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற சொகுசு பஸ், ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் சின்னதேகுரு என்ற இடத்தில் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. சொகுசு பஸ் மொத்தமும் தீப்பற்றி எரிந்தது. 20 பேர் பலியாகினர். இவ்வளவு பெரிய கோர விபத்துக்கு காரணம் ஒரு போதை ஆசாமி தான் என்பது அதிர்ச்சியின் உச்சம். பஸ்சில் மொத்தம் 43 பேர் இருந்தனர். 19 பேர் இறந்து விட்டனர். பெரும்பாலானோர் இளைஞர்கள் தான். எல்லோருக்கும் பல கனவுகள் இருந்தது. ஆனால் இன்னொருத்தரின் போதை பழக்கம், அவர் உயிரை காவு கேட்டதோடு, 19 அப்பாவிகள் உயிரையும் குடித்து விட்டது என்று விசாரித்த போலீசார் கூறினர். கோர விபத்துக்கு காரணமான போதை ஆசாமி பெயர் சிவசங்கர் வயது 21. கர்னூர் மாவட்டம் தண்டரபாடு பகுதியை சேர்ந்த கிரானைட் தொழிலாளி என்பது தெரியவந்தது. இப்போது இறந்த போதை ஆசாமி மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்குவரத்து விதிகளை மதிக்காமல் மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுவது; அலட்சியமாக இருந்து மரணங்களை உண்டு பண்ணுவது போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். விபத்துக்கு முன்பு பெட்ரோல் பங்கில் போதை ஆசாமி செய்த அட்டாகாசம் தொடர்பான வீடியோ வெளியாகி ஏற்கனவே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதில் சிவசங்கரும் அவரது நண்பர் எரிஸ்வாமியும் பைக்கில் பெட்ரோல் பங்க் வருகின்றனர். ஊழியர்களை கத்தி கூப்பிடுகின்றனர். யாரும் வராததால் பைக்கை வைத்து அட்டகாசம் செய்கின்றனர். பின்னர் தட்டுத்தடுமாறி அங்கிருந்து செல்கின்றனர். இந்த காட்சிகள் எல்லாம் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது. பெட்ரோல் பங்கில் இருந்து அவர்கள் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்து நடந்து விட்டது. இதற்கிடையே எப்ஐஆரில் இருக்கும் விவரங்கள் பற்றி போலீசார் கூறியது: பைக் ஓட்டிய சிவசங்கர், எரிஸ்வாமியுடன் பெட்ரோல் பங்கில் இருந்து புறப்பட்டதும், போதையில் பைக்கை அதிவேகமாகவும் தாறுமாறாகவும் ஓட்டி இருக்கிறார். சில நிமிடங்களில் ரோட்டின் சென்டர் மீடியனில் மோதி பைக் சறுக்கி விழுந்தது. சம்பவ இடத்திலேயே சிவசங்கர் உயிரிழந்தார். எரிஸ்வாமி மட்டும் உயிர் பிழைத்தார். நண்பனை ரோட்டின் ஓரத்துக்கு இழுத்து வந்த எரிஸ்வாமி, அவனை தட்டி எழுப்ப பார்த்தார். அப்போது தான் அவன் இறந்து விட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போதே அந்த வழியாக வந்த ஒரு பஸ் சென்டர் மீடியனை ஒட்டி கிடந்த பைக் மீது மோதியது. இதில் பைக் ரோட்டின் மையப்பகுதியில் வந்து விழுந்தது. அடுத்த சில நொடிகளில் 43 பேருடன் பின்னால் வந்த சொகுசு பஸ், ரோட்டில் கிடந்த பைக் மீது மோதியது. பின்னர் பஸ்சின் டீசல் டேங்கில் இடித்ததால் டேங் வெடித்து தீப்பற்றியது. சொகுசு பஸ் முழுதும் தீ பரவியது. இதில் பஸ்சில் இருந்த 12 கிலோ வாட் பேட்டரிகள் இரண்டும் வெடித்து சிதறின. இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. அதே போல் பஸ்சின் சரக்கு வைக்கும் பெட்டியில் செல்போன் பார்சல்கள் இருந்தன. அவற்றின் பேட்டரியும் வெடித்ததால் விபத்து கோரமாக மாறியது. சொகுசு பஸ் என்பதாலும் உள்ளே ஏசி வசதி செய்யப்பட்டு இருந்ததாலும் கதவு, ஜன்னல்கள் மூடப்பட்டு இருந்தன. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணிகள் என்ன நடக்கிறது என்பதை சுதாரித்து தப்புவதற்குள் பஸ் முழுதும் தீப்பிடித்து விட்டது. எனவே தான் 19 பேர் உயிரிழக்க நேரிட்டது. பஸ் தீப்பற்றியதை பார்த்த சிவங்கரின் நண்பன் எரிஸ்வாமி அங்கிருந்து ஓடி விட்டார். மறுநாள் போலீசார் அவரை பிடித்தனர். அவர் தான் நடந்த எல்லா விவரத்தையும் போலீசில் சொன்னார். பைக்கில் புறப்படுவதற்கு முன்பு சிவசங்கருடன் சேர்ந்து மது அருந்தியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்தார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் வழக்கு பதிவு செய்ததாக போலீசார் கூறினர். #KurnoolBusFireUpdates #KurnoolBusFireVideo #KurnoolBusAccident #BengaluruToHyderabadBusFire #BusFireNews #KurnoolAccidentUpdate #FireIncidentKurnool #LiveUpdatesKurnool #BengaluruToHyderabad #RoadSafety #BusSafety #TravelDiaries #KurnoolNews #AccidentReports #PublicTransportSafety #HyderabadBusService #KurnoolTragedy #BusJourney #StaySafeOnTheRoad