உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீசுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் பரபரப்பு காட்சிகள் | Land issue | People protest | Encroachmen

போலீசுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் பரபரப்பு காட்சிகள் | Land issue | People protest | Encroachmen

கடலூர், வெள்ளக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட மலையடிக்குப்பம், கொடுக்கன்பாளையம், பெத்தாங்குப்பம் கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், 15 நாட்களுக்குள் இடத்தை காலி செய்ய வேண்டுமென்றும் அப்பகுதி மக்களுக்கு டிசம்பர் 19ல் வருவாய்த்துறையினர் நோட்டீஸ் அளித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மலையடிக்குப்பம் கிராமத்தில் மக்கள் ஏற்கனவே சமையல் பாத்திரங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 தலைமுறைகளாக அங்கு வசிப்பதாகவும், பட்டா வழங்கக்கோரி அளித்த மனு பரிசீலனையில் இருப்பதாகவும் கூறுகின்றனர். இப்போது 150 பேரின் வீடுகள், முந்திரி பயிர்களை அகற்றப்போவதவாக கூறப்படுவதால், நடவடிக்கையை அரசு கைவிட்டு, அனைவருக்கும் உரிய இலவச பட்டா வழங்க கலெக்டரை சந்தித்து வலியுறுத்தி இருந்தனர். ஆனால் அறிவித்தபடி ஆக்கிரமிப்புகளை அகற்ற ஜேசிபியுடன் வருவாய் அதிகாரிகள் கிராமத்திற்குள் வந்தனர். அவர்களை முற்றுகையிட்ட கிராம மக்கள், ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுத்து நிறுத்தி போராட்டம் செய்தனர். இதனால் பண்ருட்டி டிஎஸ்பி ராஜா தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். கோட்டாட்சியர் அபிநயா, தாசில்தார் பலராமன் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அது தோல்வியில் முடிந்ததால், ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் ஜேசிபி முன் படுத்து போராட்டத்தை தீவிரிப்படுத்தினர்.

ஜன 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை