காஷ்மீர் மண்சரிவு 5 பக்தர்கள் சீரியஸ்! | Landslide | Mata Vaishno Devi Yatra route | Kashmir
காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்லும் பாதையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இன்று காலை 8.30 மணி அளவில் குதிரை சவாரி மூலம் யாத்திரை செல்லும் வழியான குல்சான் கா லங்கர் அருகே உள்ள பங்காங்கா பகுதியில் பெரிய மண் சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் சென்னையை சேர்ந்த குப்பன் வயது70, அவரது மனைவி ராதா 66, ஹரியானாவை சேர்ந்த ஒருவர் உள்பட 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு குப்பன் உள்பட இருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். சரிவு ஏற்பட்ட இடத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார். மண் மற்றும் கற்களை அகற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. சரிவு காரணமாக மதியம் வரை யாத்திரை ரத்து செய்யப்பட்டது.