வீடுகளை விட்டு மக்கள் வெளியேற உத்தரவு
நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஜூன் முதல் பருவமழை கொட்டி தீர்க்கிறது. ஜூன் 27, 28ல் பெய்த அதி கன மழையால் மேல்கூடலூர், கோக்கால் ஒன்றரை சென்ட் குடியிருப்பு பகுதிகளில் 6 வீடுகள் மற்றும் முதியோர் இல்லத்தில் விரிசல் ஏற்பட்டது. இப்போது அந்த கட்டடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணில் புதைந்து வருகிறது. அங்கு வசித்தவர்கள் வீடுகளை காலி செய்துவிட்டு உறவினர்கள் வீடுகளில் தங்கி உள்ளனர். அப்பகுதியை வருவாய், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வு முடிந்த பின், இது நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதி; பொதுமக்கள் நடமாட தடை செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு பலகை வைத்து விட்டு சென்றனர். வீடுகளை ஒட்டி அரசு மருத்துவமனை கட்ட மண், மரங்கள் அகற்றப்பட்டதால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் நினைத்தனர்.
ஆக 05, 2024