/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னை பக்கத்தில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு | low pressure area | Tamil Nadu rain | chennai rain
சென்னை பக்கத்தில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு | low pressure area | Tamil Nadu rain | chennai rain
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறி உள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: நேற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. தொடர்ந்து அதே இடத்தில் நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியை நெருங்கும்.
டிச 18, 2024