/ தினமலர் டிவி
/ பொது
/ சிலிண்டர் பதுக்கியதாக பறிமுதல் செய்த சம்பவத்தில் ட்விஸ்ட் | LPG Cylinder Seizure
சிலிண்டர் பதுக்கியதாக பறிமுதல் செய்த சம்பவத்தில் ட்விஸ்ட் | LPG Cylinder Seizure
திருப்பூரை சேர்ந்த ராஜேஷ் குமார். கேஸ் ஏஜென்சி வைத்துள்ளார். இவரது குடோன் அருள்புரத்தில் உள்ளது. குடோனுக்கு வெளியே இருந்த இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வணிக சிலிண்டர்கள் அடுக்கி வைத்திருந்தார். அதனை கண்ட சிலர், சிலிண்டர் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என அரசுக்கு புகார் தெரிவித்தனர். திருப்பூர் மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன், வட்டாட்சியர் மோகன் தலைமையிலான அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர். இதில் உரிமம் பெறாத காலி இடத்தில் வைக்கப்பட்டிருந்த 123 சிலிண்டர்களை பறிமுதல் செய்து குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மார் 19, 2026