/ தினமலர் டிவி
/ பொது
/ தொழில்நுட்பத்தால் சாதித்தது வனத்துறை | AI Technology | Madukkarai | Elephants
தொழில்நுட்பத்தால் சாதித்தது வனத்துறை | AI Technology | Madukkarai | Elephants
கேரளாவில் இருந்து தமிழகம் வரும் ரயில்கள், கோவை மதுக்கரை வழித்தடத்தில் செல்கின்றன. இங்கு அடர்ந்த வனப்பகுதி நடுவே ரயில் பாதை உள்ளது. தண்ணீர் தேடி வரும் யானைகள் அப்பகுதியில் தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் சிக்கி இறப்பது சில ஆண்டுகளாக அதிகரித்து வந்தது. 2017 முதல் 2021 வரை 79 யானைகள் ரயில்கள் மோதி இறந்தன. 2022ல் மட்டும் 14 யானைகள் இறந்தன. இது தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி யானைகள் இறப்பை தடுக்க வன மற்றும் ரயில்வே துறைக்கு உத்தரவிட்டது.
மார் 21, 2025