உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாட்டுதாவணி தோரணவாயிலை அகற்றும் போது நடந்த சோக சம்பவம்! Madurai | Mattuthavani Arch | JCB Operator

மாட்டுதாவணி தோரணவாயிலை அகற்றும் போது நடந்த சோக சம்பவம்! Madurai | Mattuthavani Arch | JCB Operator

மதுரையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நுழைவு வாயில்களை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு ஆறு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மாநகராட்சி சார்பில் நேற்று இரவு 2 ஜே.சி.பி.க்கள் மூலம் மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள நக்கீரர் தோரண வாயிலை இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக இடிபட்ட தோரண வாயில் ஜே.சி.பி. வாகனம் மீதே விழுந்தது. இதில் சிந்தாமணியை சேர்ந்த ஒப்பந்ததாரர் நல்லதம்பி, ஜே.சி.பி. டிரைவர் நாகலிங்கம் ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பலத்த காயத்துடன் நல்லதம்பி மீட்கப்பட்டார்.

பிப் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி