/ தினமலர் டிவி
/ பொது
/ மதுரை மாநகராட்சி ஊழல்: தூத்துக்குடி உதவி ஆணையர் கைது Madurai corporation property tax scam thoothuk
மதுரை மாநகராட்சி ஊழல்: தூத்துக்குடி உதவி ஆணையர் கைது Madurai corporation property tax scam thoothuk
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இது, 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் மற்றும் தனியார் கட்டடங்களுக்கு சொத்து வரியை குறைவாக நிர்ணயித்து அதிகாரிகள், ஊழியர்களே மோசடியில் ஈடுபட்டதை கடந்த ஆண்டு மாநகராட்சி ஆணையராக இருந்த தினேஷ்குமார் கண்டுபிடித்தார். கட்டட உரிமையாளர்களுக்கு முறைகேடாக சலுகை அளித்துவிட்டு, அதற்கு பிரதிபலனாக பணம் பெற்றுள்ளனர். இப்படித்தான் சொத்து வரி ஊழல் நடந்துள்ளது. இதனால் மதுரை மாநகராட்சிக்கு கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆக 12, 2025