உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மதுரை இளைஞரை ரவுடிகள் விரட்டி வெட்டும் பகீர் காட்சி madurai crime case |madurai cctv| jaihindpuram

மதுரை இளைஞரை ரவுடிகள் விரட்டி வெட்டும் பகீர் காட்சி madurai crime case |madurai cctv| jaihindpuram

துரை சோலை அழகுபுரம் மகாலட்சுமி கோயில் தெருவை சேர்ந்த இளைஞர் கார்த்திக். சோலை அழகுபுரம் பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்ற சில ரவுடிகளை கார்த்திக் மற்றும் அவரது அப்பா பாண்டி தட்டி கேட்டு இருக்கின்றனர். இதை மனதில் வைத்த ரவுடிகள் நள்ளிரவில் கார்த்திக் வீடு இருக்கும் தெருவுக்குள் பட்டா கத்தியுடன் இறங்கினர். மிரட்டல் விடுத்தபடி அங்கும் இங்கும் ஆயுதங்களுடன் நடந்தனர். தூங்கிக்கொண்டிருந்த மக்கள் சத்தம் கேட்டு எழும்பி வந்தனர். கார்த்திக்கும் அவரது அப்பா பாண்டியும் வீட்டின் வாசலில் நின்றனர். அவர்களை வெட்ட ரவுடிகள் ஓடி வந்தனர். கார்த்திக் உடம்பில் வெட்டு விழுந்தது. உடனே அப்பாவும் மகனும் வீட்டுக்குள் ஓடினர். அவர்கள் மீது ரவுடிகள் கல் வீசினர். மக்கள் ஒன்று திரண்டு ஓடி வந்தனர். இதனால் ரவுடிகள் அங்கிருந்து தப்பினர். இதற்கிடையே ரவுடிகள் பட்டா கத்தியுடன் தெருவில் உலா வருவது, கார்த்திக்கை வெட்டுவது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜூலை 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி