தினமலர் வழிகாட்டி- 2024: மாணவர், பெற்றோர் மகிழ்ச்சி | Engineering Counseling Guide | Dinamalar
தினமலர் நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி சார்பில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் தொடர்பாக மாணவர்களுக்கான தினமலர் வழிகாட்டி- 2024 நிகழ்ச்சி மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் நடைபெற்றது. இன்ஜினியரிங் படிப்புகளுக்காக விண்ணப்பித்த 2 லட்சம் மாணவர்களுக்கு அவர்கள் கட்ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் 1 லட்சத்து 99,868 பேருக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 22 மற்றும் 23 ம் தேதி, பொதுக் கலந்தாய்வு ஜூலை 29 முதல் செப்டம்பர் 3 ம் தேதி வரை நடக்கிறது. இக்கலந்தாய்வு எப்படி நடக்கும். மாணவர்கள் எவ்வாறு தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் நலன் கருதி தினமலர் சார்பில் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் கல்வியாளர்கள் விளக்கம் அளித்தனர்.