உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிலிண்டர்கள் வெடித்து குடிசைகள் எரிந்தன! அசம்பாவிதம் தவிர்ப்பு | Mahakumbh Fire Incident | Prayagraj

சிலிண்டர்கள் வெடித்து குடிசைகள் எரிந்தன! அசம்பாவிதம் தவிர்ப்பு | Mahakumbh Fire Incident | Prayagraj

உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் கடந்த 13ம் தேதி மஹா கும்பமேளா துவங்கியது. திரிவேணி சங்கமத்தில் இது வரை, ஏழு கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளனர். நேற்று மட்டும் 47 லட்சம் பேர் புனித நீராடினர். அடுத்த மாதம் 26 வரை இந்த மிகப்பெரிய ஆன்மிக நிகழ்ச்சி நடக்கிறது. 40 கோடிக்கும் அதிகமானோர் வந்து திரிவேணி சங்கமத்தில் நீராடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பமேளாவுக்காக உருவாக்கப்பட்டுள்ள மஹாகும்ப நகரில் ஏராளமான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. செக்டார் - 19ல் உள்ள ஒரு கூடாரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நேற்று திடீரென வெடித்து சிதறின. கூடாரத்தில் தீ பிடித்தது. சில வினாடிகளில் அடுத்தடுத்த கூடாரங்களுக்கும் பரவியது. அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் பதறியடித்து ஓடினர். உடனடியாக களமிறங்கிய தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

ஜன 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை