சம்பவம் தொடர்பாக துணை முதல்வர் அஜித் பவார் விளக்கம் | Ajit Pawar | Maharashtra deputy cm
ேரளாவை சேர்ந்தவர் ஐபிஎஸ் அஞ்சனா கிருஷ்ணா. இவர் சமீபத்தில் மஹாராஷ்டிராவில் பணியில் அமர்த்தப்பட்டார். சமீபத்தில் சோலாப்பூர் கர்மலா என்ற பகுதியில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதை தடுத்தார். அப்போது, அங்கிருந்த துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஒருவர் போலீசாரை தடுத்தார். அஜித்பவாருக்கு போனில் அழைத்து அஞ்சனா கிருஷ்ணாவிடம் கொடுத்தார். அஜித் பவாரின் குரலை கண்டுபிடிக்க முடியாத அஞ்சனா, தனது போனில் அழைக்கும்படி தெரிவித்துள்ளார். கோபமடைந்த அஜித் பவார், உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன். என்னை பார்க்க வேண்டுமா. உங்களது வாட்ஸ்அப் எண்ணை கொடுங்கள். எனது முகத்தை நீங்கள் பார்க்க முடியும். உங்களுக்கு என்ன தைரியம். அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என்றார். இது குறித்த வீடியோ வைரலாக துவங்கியது. மீடியாக்களிலும் செய்தி வெளியாக அம்மாநில எதிர்க்கட்சிகள் முதல்வர் பட்னாவிஸ் மற்றும் அஜித்பவாரை கடுமையாக விமர்சிக்க துவங்கினர். பிரச்னை பெரிதானதை தொடர்ந்து அஜித் பவார் விளக்கமளித்தார். போலீஸ் அதிகாரியுடன் நான் நடத்திய கலந்துரையாடலை வைத்து எனது நோக்கம் குறித்து கேள்வி எழுப்புகின்றனர். சட்ட அமலாக்கத்துறையினர் பணிகளில் தலையிடுவது எனது நோக்கம் அல்ல. அந்த இடத்தில் பிரச்னை மேலும் பெரிதாகாமல் இருக்கவே தலையிட்டேன். தைரியத்துடனும் நேர்மையுடனும் பணியாற்றும் பெண் அதிகாரிகள் மீது நல்ல மதிப்பு கொண்டுள்ளேன். சட்டத்தின் ஆட்சியை மதிக்கிறேன். சட்டவிரோத மணல் கடத்தல் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை வெளியிட்டு உள்ளார்.