உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை பற்றவைத்த உத்தவ் Maharashtra Politics| Shiv Sena| BJP| Uddhav| Sanja

மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை பற்றவைத்த உத்தவ் Maharashtra Politics| Shiv Sena| BJP| Uddhav| Sanja

மகாராஷ்டிரா சட்டசபைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் களம் பரபரப்பாக தொடங்கி உள்ளது. ஆளும் கூட்டணியில் பாஜ, - ஷிண்டேவின் சிவசேனா,- அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. எதிர்க்கட்சி கூட்டணியில், காங்கிரஸ், - உத்தவின் சிவசேனா, - சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன. பாஜவை பொருத்தவரை தேர்தல் முடிவுகளுக்கு பின்பே முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வர். கூட்டணி முடிவும் அப்படித்தான். எதிர்க்கட்சி கூட்டணியில், பிருத்விராஜ் சவான், சரத் பவார், உத்தவ் தாக்கரே என பல பெருந்தலைகள் உள்ளனர். இவர்களில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் சர்ச்சை நீடிக்கிறது. காங்கிரசும், சரத் பாவரும் அவர்கள் தரப்பில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கட்டும். நான் நிபந்தனையின்றி ஆதரிக்கிறேன் என உத்தவ் நேற்று கூறியிருந்தார். ஆனால், எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் முதல்வர் பதவி என்பது மட்டும் கூடாது என கண்டிஷன் போட்டார்.

ஆக 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை