பெண் டாக்டர் சம்பவம் சரிகிறது மம்தா செல்வாக்கு Mamtha | CM West Bengal | Internal Survey
2019ல் நடந்த லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி திரிணமுல் காங்கிரசுக்கு சவால் விடும் அளவுக்கு எம்.பி. தொகுதிகளை கைப்பற்றியது. 18 இடங்களில் வெற்றி, 40 சதவீத வாக்குகளை பெற்று திரிணாமுல் காங்கிரசுக்கு பாஜ கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கான காரணங்களை அறிய மாநிலம் முழுவதும் முதல்வர் மம்தா சர்வே எடுத்தார். கட்சிக்கு எந்த அளவுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது, முதல்வர் மம்தா புகழ் எப்படி இருக்கிறது என்பதை அறிய, 2019க்கு பிறகு அது போன்று அடிக்கடி சர்வேக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆகஸ்ட் 9ம்தேதி கொல்கத்தா பயிற்சி பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு நடந்த சம்பவங்கள் மாநில அரசுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கி வருகிறது. இதனால் திரிணாமுல் கட்சி மீண்டும் ஒரு சர்வே எடுத்தது. டாக்டர் கொலை விவகாரத்தில் முதல்வர் மம்தாவின் செயல்பாடு மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை கண்டு திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொலையில் திரிணமுல் கட்சி தலைவர்கள் பல்வேறு விஷயங்களை மூடி மறைக்க முயன்றனர். கொலை செய்யப்பட்ட டாக்டரின் பெற்றோருக்கு போலீஸ் பணம் கொடுக்க முயன்றது.