குறைவாக பேசினார்; நிறைய சாதித்தார்: ஸ்டாலின்
மன்மோகன் சிங் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது இரங்கல் செய்தியில், இந்திய பொருளாதாரத்தை சீர்திருத்துவதில் முக்கிய பங்களிப்பை தந்தவர் மன்மோகன் சிங். தேசத்துக்காக அவர் ஆற்றிய சேவை, களங்கமற்ற அரசியல் வாழ்வு, மிகுந்த பணிவு ஆகியவற்றுக்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார். அவரது மறைவு அனைவருக்கும் பேரிழப்பு. பாரதத்தின் தலைசிறந்த மகன்களில் ஒருவருக்கு மரியாதைக்குரிய அஞ்சி செலுத்துவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
டிச 27, 2024