சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் சுவாரஸ்யம் | Manu Bhaker
பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கல பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது. அப்போது உரையாடிய அவரிடம் மகாபலிபுரம், மீனாட்சி கோயில் உள்ளிட்டவை குறித்து கேட்கப்பட்டது. தென்னகம் பற்றி அவ்வளவாக தெரியாது என்றார். முதல்வர் ஸ்டாலினை தெரியுமா என்ற கேள்விக்கு தெரியாது என்றார். அப்போது அரங்கில் சிரிப்பலை எழுந்தது. விஜய் பற்றி கேட்டபோது, ஓ தெரியுமே என்று சட்டென பதில் சொல்ல அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
ஆக 20, 2024