உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சாராய விற்பனையை தட்டி கேட்ட 2 வாலிபர்கள் கதை முடிப்பு! | Mayiladuthurai | liquor sale

சாராய விற்பனையை தட்டி கேட்ட 2 வாலிபர்கள் கதை முடிப்பு! | Mayiladuthurai | liquor sale

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே முட்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஹரிஷ் வயது 25. பாலிடெக்னிக் முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். நேற்று இரவு 10.30 மணியளவில் ஹரிஷ், அவரது நண்பர்களுடன் தெரு முனையில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் கத்தியால் ஹரிஷை சரமாரியாக குத்தினர். தடுக்க வந்த அவரது நண்பர் ஹரி சக்தியையும் குத்தி விட்டு தப்பிச் சென்றனர். ஹரிஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஹரி சக்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். ஹரி சக்திக்கு வயது 22, இன்ஜினியரிங் மாணவன். அவரது மற்றொரு நண்பர் அடையாளம் காட்ட இந்த சதி வேலையை செய்தது அதே பகுதியை சேர்ந்த சாராய வியாபாரி ராஜ்குமார் என்பது தெரிய வந்தது.

பிப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை