'நேட்டோ' தலைவர் சொல்வது ஆதாரமற்றது: வெளியுறவு அமைச்சகம் MEA's Randhir Jaiswal denies NATO claim| Mod
ரஷ்யா- உக்ரைன் போர் 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. நேட்டோ ராணுவ கூட்டணியில் உக்ரைன் இணைவதை எதிர்த்துதான், ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயன்று வருகிறார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம், போருக்கு நிதியுதவி அளிப்பதாக கூறிய டிரம்ப், இந்திய பொருட்களுக்கு அபராத்துடன் 50 சதவீத வரி விதித்தார். இச்சூழலில், நியூயார்க்கில் நடக்கும் ஐநா பொதுசபை கூட்டத்திற்கு சென்றிருந்த நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே, அதிபர் டிரம்பின் வரி விதிப்புக்கு ஆதரவாக பேட்டி அளித்தார். இந்தியா மீதான டிரம்ப்பின் வரி விதிப்பு ரஷ்யாவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் இருந்து ரஷ்ய அதிபர் புடினுக்கு போன் கால்கள் பறக்கின்றன. உக்ரைன் போரில் ரஷ்யாவின் திட்டம் என்ன என்பது பற்றி பிரதமர் மோடி கேட்டு இருக்கிறார் என்று கூறினார். நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவின் இந்த பேச்சுக்கு, இந்திய வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவு அதிகாரி ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறும்போது, அதிபர் புடினிடம் பிரதமர் மோடி பேசியதாக ரூட்டே சொல்வது உண்மையில் தவறானது; முற்றிலும் ஆதாரம் அற்றது எனக்கூறினார். எந்த சந்தர்ப்பத்திலும் புடின்-பிரதமர் மோடி இடையே அப்படியொரு உரையாடல் ஏதுவும் நடத்தவில்லை. நேட்டோ போன்ற முக்கியமான அமைப்பின் தலைமை பொறுப்பில் இருப்பவர், பொதுவெளியில் பேசும்போது, அதிக பொறுப்புடனும், மிகச்சரியானதையும் பேச வேண்டும். பிரதமர் மோடியின் செயல்பாடுகளை தவறாக சித்தரிப்பது; ஒருபோதும் நடக்காத உரையாடலை நடந்ததாக சொல்வது போன்ற ஊகமான அல்லது கவனக்குறைவான பேச்சுகள் ஏற்கத்தக்கதல்ல என்று மத்திய வெளியுறவு அதிகாரி ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார். #RandhirJaiswal #NATOClaim #ModiPutinPhoneCall #BaselessStatement #MEA #India #RussiaRelations #NatoMarkRutte #PmModi