/ தினமலர் டிவி
/ பொது
/ மதுரை மீனாட்சி கோயிலில் வைகாசி விழா கோலாகலம் | Meenakshi Amman Temple | Vaikasi Vila
மதுரை மீனாட்சி கோயிலில் வைகாசி விழா கோலாகலம் | Meenakshi Amman Temple | Vaikasi Vila
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வைகாசி வசந்த விழா கோலாகலமாக நடந்தது. மீனாட்சி சுந்தரேஸ்வரரை ஆயிரகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மே 31ல் துவங்கிய வைகாசி வசந்த உற்சவ விழா வரும் 9ம் தேதி வரை நடக்க உள்ளது. விழாவையொட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி கோயில் எதிரில் அமையப்பெற்ற புது மண்டபத்தில் எழுந்தருளினார். தீப ஆராதனையை தொடர்ந்து புதுமண்டபத்தில் இருந்து புறப்பட்டார். நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்து மீண்டும் கோயிலில் எழுந்தருளினார். விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
ஜூன் 03, 2025