உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மதுரை சித்திரை திருவிழாவில் தேரோட்டம் களைகட்டியது! Meenakshi Temple|Chithirai Car Festival|Madurai

மதுரை சித்திரை திருவிழாவில் தேரோட்டம் களைகட்டியது! Meenakshi Temple|Chithirai Car Festival|Madurai

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக் விஜயம் முடிந்து நேற்று மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று காலை தேரோட்டம் விமர்சையாக தொடங்கியது. அதிகாலையில் கீழமாசி வீதியில் உள்ள தேரடி பகுதிக்கு மீனாட்சிஅம்மனும், சுந்தரேசுவரரும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வந்தனர். பெரியதேரில் சுந்தரேஸ்வர் பிரியாவிடை சமேதராகவும், சிறிய தேரில் சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர். அங்குள்ள கருப்பணசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தேரோட்டம் கோலகலமாக துவங்கியது.

மே 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை