உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாதக்கணக்கில் வாகனங்களை நிறுத்துவதால் பயணிகள் அவதி! Metro Train | Chennai | Parking Issue

மாதக்கணக்கில் வாகனங்களை நிறுத்துவதால் பயணிகள் அவதி! Metro Train | Chennai | Parking Issue

சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில், 54 கி.மீ துாரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணியர் வீடுகளில் இருந்து இருசக்கர வாகனங்கள், கார்களில் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து மெட்ரோ ரயில்களில் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். இதற்கேற்ப சென்ட்ரல், எழும்பூர், விமான நிலையம், கோயம்பேடு, வடபழனி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட 41 ரயில் நிலையங்களிலும் வாகனம் நிறுத்துவதற்கு இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 28 மெட்ரோ ரயில் நிலையங்களில் கார்களை நிறுத்தி செல்லும் வசதி இருக்கிறது. மெட்ரோ ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வாகன நிறுத்தங்களில் வாகனங்கள் நிரம்பி வருகின்றன. காலை 9:30 மணிக்கே பெரும்பாலான மெட்ரோ ரயில் நிலையங்களின் வாகன நிறுத்தங்கள் நிரம்பி விடுகின்றன. அதன்பின் வரும் வாகனங்கள் இடம் இல்லை எனக் கூறி, திருப்பி அனுப்பப்படுகின்றன.

ஜூலை 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை