நிலக்கரி குவியலில் சிக்கிய ஊழியர்கள் கதி என்ன? | Mettur | Mettur Thermal Power Plant
சேலம் மேட்டூரில் 840 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள எரிகலனுக்கு கன்வேயர் பெல்ட் மூலம் இணைக்கப்பட்ட தொட்டி மூலம் நிலக்கரி எடுத்து செல்லப்படும். ஆறாவது யூனிட் அருகே ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில் 50 அடி உயரத்தில் இருந்து நிலக்கரி தொட்டி அறுந்து கீழே கொட்டியது. கீழே சிதறிய வேகத்தில் நிலக்கரி தீ பிடிக்க துவங்கியது. நிலக்கரி குவியலுக்குள் சிக்கி 5 ஊழியர்கள் படுகாயமடைந்தனர். விபத்தில் சிக்கிய ஸ்ரீகாந்த், மனோஜ் குமார், சீனிவாசன், முருகன், கௌதம் ஆகிய ஐந்து பேர் மீட்கப்பட்டு ஆஸ்பிடலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். நிலக்கரி மலை போல குவிந்து கிடப்பதால் இன்னும் யாராவது சிக்கி இருக்கிறார்களா என தேடும் பணி நடக்கிறது.