/ தினமலர் டிவி
/ பொது
/ தாது மணல் அளவை இஸ்ரோ உதவியுடன் அளவீடு செய்ய முடிவு! | Mineral Smuggling | CBI | ISRO
தாது மணல் அளவை இஸ்ரோ உதவியுடன் அளவீடு செய்ய முடிவு! | Mineral Smuggling | CBI | ISRO
மலைக்க வைக்கும் கனிமவள கொள்ளை! இஸ்ரோ உதவியை நாடும் சிபிஐ! திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில், இயற்கை வளமான தாது மணல் கொள்ளை நடந்துள்ளது. அதிலிருந்து தோரியம், கார்னைட் உள்ளிட்ட கனிமங்கள் பிரித்து எடுக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு உள்ளன. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வி.வி.மினரல்ஸ் உள்ளிட்ட ஆறு நிறுவனங்கள் மற்றும் 21 பேர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களின் வீடு அலுவலகங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
ஏப் 09, 2025