/ தினமலர் டிவி
/ பொது
/ பணிகளை பார்வையிட வந்த அமைச்சர் டென்ஷன் Minister KN Nehru| Thangam Thennarasu| Collector Karthikeyan
பணிகளை பார்வையிட வந்த அமைச்சர் டென்ஷன் Minister KN Nehru| Thangam Thennarasu| Collector Karthikeyan
திருநெல்வேலியில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை பார்வையிட அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.என்.நேரு ஆகியோர் நேற்றிரவு நெல்லை வந்தனர். இன்று காலை 9.30 மணிக்கு திருநெல்வேலி, பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட்டில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் பார்வையிட்டனர். ஆனால், கலெக்டர் கார்த்திகேயன் வரவில்லை. அமைச்சர்கள் வருகை பற்றி, ஏற்கனவே கலெக்டருக்கு தகவல் அளிக்கப்பட்டு இருந்தது. அவர் நெல்லையில் ஒரு கோயில் விழாவில் பங்கேற்க சென்று இருந்தார். வெகுநேரம் ஆகியும் கலெக்டர் வராததால் அமைச்சர் நேரு டென்ஷன் ஆனார். கலெக்டருக்கு போன் போடச்சொல்லி பேசினார்.
ஆக 04, 2024