சென்னைவாசிகளுக்கு உதயநிதி முக்கிய அறிவிப்பு Minister Udhayanidhi formula 4 car race chennai Island
சென்னையில் முதன்முறையாக ஃபார்முலா 4 கார்பந்தயம் நடத்த தனியார் அமைப்புடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒப்பந்தம் செய்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் சென்னையில் கார்பந்தயம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால் கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது. வரும் 31 ம் தேதி மற்றும் செப்டம்பர் 1ம்தேதி ஆகிய 2 நாட்கள் சென்னையில் இந்த கார் பந்தயம் நடக்கவுள்ளது. தீவுத்திடலை சுற்றியுள்ள ஃப்ளேக் ஸ்டாஃப் சாலை flag staff , கடற்கரை சாலை, சிவானந்தம் சாலை, அண்ணா சாலை ஆகியவற்றில் கார் பந்தயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் மையப்பகுதியில் நடத்தினால் மக்கள் பாதிக்கப்படுவர்; குறிப்பாக, ராஜிவ் அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகள் பாதிக்கப்படுவர் என எதிர்ப்பு கிளம்பியது. ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தடைகளை தாண்டி சென்னையில் கார் பந்தயம் நடப்பது உறுதியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி சென்னை கோட்டையில் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு அவர் கூறியதாவது: பைட் உதயநிதி விளையாட்டு அமைச்சர் தெற்காசியாவில் முதன் முறையாக நடத்தப்படும் இரவு நேர ஸ்ட்ரீட் கார் பந்தயம் என்ற சிறப்பை இந்த பந்தயம் பெற்றுள்ளதால் சென்னை மக்களிடையே எதிர்பார்ப்பு கூடியுள்ளது. முதல் நாளில் இலவசம்