உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமைச்சர் பதவிக்கு பதிலாக மாநில தலைவர் பதவி கொடுங்க

அமைச்சர் பதவிக்கு பதிலாக மாநில தலைவர் பதவி கொடுங்க

புதுச்சேரியில் ஊசுடு தொகுதி பாஜ எம்எல்ஏ சாய் சரவணகுமார். ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருந்தார். இன்று அவர் பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் மோடிதான் எனக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார்; இன்று விலக சொல்லியிருக்கிறார் அதனால் ராஜினாமா செய்கிறேன் என அவர் கூறியிருந்தார். இச்சூழலில், சாய் சரவணகுமாரை பதவி நீக்கியதாக பாஜ மேலிடத்தை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகே மறியலில் ஈடுபட்டனர். சொத்துகளை விற்று கட்சியை வளர்த்தவர்; தொகுதி மக்களுக்கு நல்லது செய்தவரின் பதவியை பதவியை பறித்தது ஏன் என கேட்டு முழக்கமிட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். breath எஸ்சி சமூகத்துக்கு இருந்த ஒரு அமைச்சரையும் நீக்கி விட்டார்கள். அவருக்கு மாநில தலைவர் பதவி தர வேண்டும் என ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.

ஜூன் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ