உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒருபோதும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் mk stalin| dmk| tn govt

ஒருபோதும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் mk stalin| dmk| tn govt

சென்னை கொளத்தூரில், திமுக நிர்வாகி முரளிதரன் இல்ல திருமண விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். திருமணத்தை நடத்தி வைத்து மணமக்கள் மகேஷ்வர்-திவ்யகணபதியை வாழ்த்தி உரையாற்றிய ஸ்டாலின், மணமகன், மணமகள் பெயரை பார்க்கிறபோது, எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது. ஏனென்றால் தமிழ் பெயர்களாக இல்லை. இருந்தாலும் பரவாயில்லை, உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள். அதுதான் என்னுடைய அன்பான வேண்டுகோள். குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறபோது, உடனடியாக அதில் நீங்கள் இறங்கிவிட வேண்டாம். பொறுத்து, நிதானமாக - அளவோடு பெற்று வளமோடு வாழ வேண்டும் என்பது குடும்பக் கட்டுப்பாட்டு பிரச்சாரம். அதை நாம் தொடர்ந்து கடைப்பிடித்த காரணத்தால் தான் தொகுதி மறுசீரமைப்பு வருகிறபோது எம்.பி., தொகுதி குறைக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்று கொள்ள முடியாது. இருமொழிக் கொள்கைதான் வேண்டும் என்று சொல்லும் ஆற்றல் நாம் பெற்றோம். ஐந்தாயிரம் அல்ல, பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

பிப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ