உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசுப் பள்ளிகள் அவல நிலைக்கு காரணமே திமுக அரசு தான் mk stalin| eps| palanisamy| tn govt schools

அரசுப் பள்ளிகள் அவல நிலைக்கு காரணமே திமுக அரசு தான் mk stalin| eps| palanisamy| tn govt schools

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் அறிக்கை: தமிழக கல்வித்துறையை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி சீரழித்து விட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை நடத்தும் கள்ளர் பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் இல்லை. அரசு பள்ளிகள் அருகிலேயே கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்கப்படுவதை நான் சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் உதயநிதியின் ரசிகர் மன்ற தலைவராக மட்டுமே செயல்படுவது வெட்கக்கேடானது. திமுக குடும்பத்தினர் மற்றும் தனியார் பள்ளிகளை வாழவைப்பதற்காக, தமிழகம் முழுவதும் 207 அரசுப்பள்ளிகளை ஸ்டாலின் அரசு மூடி உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். அந்த இடங்களை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சிக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இலவச லேப்டாப், தாலிக்கு தங்கம் போன்ற நலத்திட்டங்களை திமுக அரசு நிறுத்தியதோடு, எந்த அடிப்படை வசதிகளும் செய்து தராமல், அப்பாவி மக்களை தனியார் பள்ளிகளுக்கு ஓட செய்துவிட்டார்கள். பிறப்பு விகிதம் குறைவு, தனியார் பள்ளி மோகத்தால் அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைந்து மூடப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை சொல்கிறது. ஏழை மாணவர்களின் நலன் கருதி மூடப்பட்ட 207 பள்ளிகளை திறந்து சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

ஆக 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை