/ தினமலர் டிவி
/ பொது
/ மோடியை காண ஓவியத்துடன் வந்த சிறுவன்: பிரதமரின் குரல் கேட்டதும் பெருக்கெடுத்த ஆனந்த கண்ணீர் Modi Gre
மோடியை காண ஓவியத்துடன் வந்த சிறுவன்: பிரதமரின் குரல் கேட்டதும் பெருக்கெடுத்த ஆனந்த கண்ணீர் Modi Gre
பிரதமரின் பேச்சை கேட்க பாவ்நகர் கூட்டத்திற்கு வந்திருந்த சிறுவன், தான் வரைந்த மோடியின் ஓவியத்துடன் நீண்ட நேரம் காத்திருந்தான். நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த சிறுவனை கண்டுகொண்ட மோடி வெகு நேரமாக ஒரு சிறுவன் கையில் ஓவியத்தை வைத்துக்கொண்டுள்ளான் அவனது கைகள் வலிக்கப்போகிறது. சிறுவன் இடம் இருந்து ஓவியத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மோடியின் செயலால் திக்குமுக்காடிப்போன சிறுவன் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான். இதைப் பார்த்த மோடி, தம்பி... அழாதே... உன் ஓவியம் எனக்கு கிடைத்துவிட்டது. அதில் உன் முகவரி இருந்தால் நிச்சயம் உனக்கு நானே கடிதம் எழுதுவேன் என்றார்.
செப் 20, 2025