ஜி20 மாநாட்டில் மோடி செய்யப்போவது என்ன? g20 summit | modi soth africa visti | trump | johannesburg
ென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நம் பிரதமர் மோடி இன்று காலை டில்லியில் இருந்து தென்ஆப்ரிக்கா புறப்பட்டு சென்றார். மாநாட்டின் 3 முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பேசுகிறார். சர்வதேச தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளார். குறிப்பாக, பிரேசில் மற்றும் தென் ஆப்ரிக்கா தலைவர்களிடம் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். ஜி20 மாநாடு பற்றி அறிக்கை வெளியிட்ட மோடி, தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறேன். ஆப்ரிக்காவில் நடைபெறுவதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்த உச்சிமாநாடு. பல உலகளாவிய பிரச்னைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும். உச்சிமாநாட்டின் போது பல உலகத் தலைவர்களையும் சந்திப்பேன் என்று கூறி உள்ளார். #g20summit2025 #ModiSouthAfricaVisit #Trump #Johannesburg #G20 #WorldLeaders #InternationalDiplomacy #GlobalSummit #UnityInDiversity #SouthAfrica2025 #PoliticalLeadership #EconomicGrowth #InternationalRelations