உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மோடியை கட்டித்தழுவி வரவேற்ற மொரீஷியஸ் பிரதமர் Modi at Mauritius| Modi Tours on Mauritius| BJP|

மோடியை கட்டித்தழுவி வரவேற்ற மொரீஷியஸ் பிரதமர் Modi at Mauritius| Modi Tours on Mauritius| BJP|

கிழக்கு ஆப்பிரிக்க தீவு நாடான மொரீஷியஸ் நாட்டின் தேசிய தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடி மொரீஷியஸ் சென்றுள்ளார். இன்று காலை போர்ட் லுாயிஸ் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானத்தில் இருந்து இறங்கிய பிரதமர் மோடியை மொரீஷியஸ் பிரதமர் நவின் ராம்கூலம் கட்டித் தழுவியும் மாலை அணிவித்தும் அன்பொழுக வரவேற்றார். பேண்டு வாத்தியத்தில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பிறகு அந்நாட்டு ராணுவ வீரர்களின் மரியாதையை மோடி ஏற்றார். மொரீஷியஸ் அரசு பிரதிநிதிகளை அந்நாட்டு பிரதமர் ராம்கூலம், பிரதமர் மோடிக்கு அறிமுகம் செய்து வைத்தார். அங்குள்ள இந்திய வம்சாவளியினர் மற்றும் மொரீஷியஸ் பெண்களின் போஜ்புரி இசை, கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி ரசித்தார்.

மார் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !