உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 50 கோடி பேர் ஏழ்மையில் இருந்து மீண்டது சாதாரண சாதனை அல்ல: ஐஐடி நிகழ்ச்சியில் மோடி பேச்சு

50 கோடி பேர் ஏழ்மையில் இருந்து மீண்டது சாதாரண சாதனை அல்ல: ஐஐடி நிகழ்ச்சியில் மோடி பேச்சு

75வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஐஐடி கரக்பூர் மாணவர்களுக்கு என் வாழ்த்துக்கள். இதே கல்வி நிறுவனத்தை சேர்ந்த முன்னாள் மாணவர் உருவாக்கிய ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தான் நாட்டின் முதல் தனியார் ராக்கெட்டை ஏவியது. ராக்கெட், விண்வெளி தொழில்நுட்பத்தில் தனியார் துறையும் பங்களிக்கும் வகையில், இந்த அரசு மிகப் பெரிய வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளது. இன்று, இத்துறையில் எண்ணற்ற நிறுவனங்கள் மிகச் சிறப்பாக செயலாற்றி வருகின்றன. நாம் எல்லை கடந்து சிந்தித்தால் தான் பலவற்றை சாதிக்க முடியும். 50 ஆண்டுளுக்கு முன் நம் நாட்டின் செமி கண்டக்டர் தயாரிப்பதற்கான வாய்ப்பு உருவானது. ஆனால், அப்போதைய அரசு அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் கைவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் செமி கண்டக்டர் உற்பத்தி பற்றி பேசிய போது, இப்போது இது மிகவும் கால தாமதப்பட்ட முயற்சி என பலர் விமர்சித்தனர். ஆனால், இன்று எண்ணற்ற நாடுகளுக்கு நாம் செமிகண்டக்டர் ஏற்றுமதி செய்கிறோம். பல ஆண்டுகளாக நாடு ஏழ்மையில் உள்ளது என்ற பேச்சு மட்டுமே இருந்தது. ஏழ்மையை அகற்றுவோம் என்ற ஸ்லோகன்கள் முந்தைய அரசுகளால் முழங்கப்பட்டன. ஆனால், அதற்கான எந்த திட்டமோ, நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை. நான் முதல் முறை பிரதமராக பதவியேற்ற போது, நாடு முழுதும் பெண்கள், தாய்மார்கள் நலன் கருதி கழிவறைகள் அமைப்போம் என பேசினேன். என் உரையை பார்லிமென்ட்டிலும் நக்கல் செய்தனர். கிண்டல் கேலிக்கு ஆளானேன். ஆனால் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

நவ 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி