/ தினமலர் டிவி
/ பொது
/ ருத்ராட்ச மாலை விற்ற பெண்ணுக்கு நடந்தது என்ன? | Monalisa Bhonsle | Mahakumbh Mela
ருத்ராட்ச மாலை விற்ற பெண்ணுக்கு நடந்தது என்ன? | Monalisa Bhonsle | Mahakumbh Mela
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா விழாவுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மகா கும்பமேளா கடந்த 13ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26 வரை இந்த விழாவில் இந்தியாவில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து புனிதநீராடி வருகின்றனர். ஜனவரி 19 வரை 8 கோடியே 26 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர் என உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
ஜன 20, 2025