உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டாக்கா கோயிலில் இந்துக்களை சந்தித்த யூனுஸ் | muhammad Yunus Bangladeshi Hindus

டாக்கா கோயிலில் இந்துக்களை சந்தித்த யூனுஸ் | muhammad Yunus Bangladeshi Hindus

கொதித்து எழுந்த இந்துக்கள் முகமது யூனுஸ் அளித்த உறுதி வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் பயங்கர கலவரத்தில் முடிந்தது. 400-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். இதனால் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் புதிய இடைக்கால அரசு பொறுப்பேற்றது. முகமது யூனுஸ் பிரதமர் பொறுப்பை கவனிக்கிறார். கலவரத்தில் சிறுபான்மை மக்களான இந்துக்களும் கொடூர தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டனர். கோயில்கள், வணிக நிறுவனங்கள் மட்டுமின்றி, இந்துக்களின் வீடுகளும் குறிவைத்து தாக்கப்பட்டன. ேஷக் ஹசீனா கட்சியில் அங்கம் வகிக்கும் சிலஇந்து அரசியல்வாதிகளும் கொல்லப்பட்டனர். ஐ.நா. சபையும், அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

ஆக 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை