மும்பையில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம் Mumbai Rain | Mono Rail Struck in Mumbai | Eknath Shi
மகாராஷ்டிராவின் மும்பையில் கனமழை வெளுத்து வாங்குகிறது. திங்கட்கிழமை அதிகனமழை கொட்டிய நிலையில், செவ்வாயன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இன்று வெறும் 6 மணி நேரத்தில் மும்பையில் 200 மிமீ மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் 350 மிமீ மழை பதிவாகியுள்ளது. சாலை, ரயில், விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கத்திற்கு அதிகமாக மோனோ ரயிலில் கூட்டம் அலைமோதியது. அதிக பாரம் காரணமாக, மின் வடத்தில் பழுது ஏற்பட்டு, செம்பூர் மைசூர் காலனி அருகே மோனோ ரயில் பாதி வழியில் பழுதாகி உயரமான பாலத்தின் மீது நின்றது. மற்றொரு ரயில் இன்ஜின் மூலம், பழுதான ரயிலை அருகே உள்ள ஸ்டேஷனுக்கு இழுத்து செல்ல முயன்றனர். ஆனால், ரயிலின் பிரேக் ஜாம் ஆகி இருந்ததால் ரயில் நகரவில்லை. இறங்க முடியாததால் பயணிகள் பீதியடைந்தனர்.