உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாகையில் தங்க மீன் விடும் திருவிழா கோலாகலம் Adipatthar or Adhipattha Nayanar Golden Fish Festival

நாகையில் தங்க மீன் விடும் திருவிழா கோலாகலம் Adipatthar or Adhipattha Nayanar Golden Fish Festival

63 நாயன்மார்களில் ஒருவரான மீனவ குலத்தில் பிறந்த அதிபத்தநாயனார் சிவபெருமானிடம் பக்தி கொண்டு முதல் மீனை சுவாமிக்காக கடலில் விடுவது வழக்கம். அவரது பக்தியை சோதித்த சிவபெருமான் தங்க மீன் ஒன்றை வலையில் கிடைக்கும்படி செய்தார். அதிபத்தநாயனார் அம்மீனையும் சிவபெருமானுக்காக வேண்டிக்கொண்டு கடலில் விட்டார். இந்நிகழ்வை நினைவுகூரும்விதமாக, நாகப்பட்டினம் நம்பியார்நகரில் இன்று தங்க மீன் விடும் திருவிழா நடைபெற்றது. புதிய ஒளி மாரியம்மன் கோயிலில் இருந்து பூஜிக்கப்பட்ட தங்கமீன் மற்றும் அதிபத்த நாயனாரின் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

செப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !