CM அறிவித்த இரண்டே நாளில் அதிரடி காட்டும் அதிகாரிகள் Faheem Khan| Yushuf Sheikh| Nagpur Riot | Build
மகாராஷ்டிரா சட்டசபை கூட்டத் தொடரில் முகலாய மன்னர் அவுரங்கசீப் குறித்து சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஆஸ்மி புகழ்ந்து பேசியது அம்மாநில அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மராட்டியர்களை கொடுமைப்படுத்திய அவுரங்கசீப்பை புகழ்வதா என இந்துத்வா அமைப்புகள் கொதித்தெழுந்தன. குல்தாபாத்தில் உள்ள அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என, பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்துத்வா அமைப்புகள் 17ம் தேதி நாக்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது, அவுரங்க சீப்பின் கல்லறை மாதிரி, குரான் வாசகங்கள் எழுதப்பட்ட துணி எரிக்கப்பட்டதாக கூறப்பட்டதால், இரு தரப்பினரிடையே கலவரம் வெடித்தது. சோசியல் மீடியாக்களில் திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டதால், நாக்பூர் நகரமே கலவர பூமியாக மாறியது. வீடுகள், கடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. பலரது டூவீலர்கள் அடித்து நொறுக்கப்பட்டன.