எல்லையில் இருந்து 20 கிமீ தொலைவில்; கூடுகிறது டென்சன் | New Chinese heliport | LAC | Indian Border
2020ல் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலுக்கு பின் இரு நாட்டு உறவில் விரிசல் அதிகரித்தது. கடந்த ஏப்ரலில், வடகிழக்கு பகுதியின் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியதால் விரிசல் மேலும் அதிகரித்துள்ளது. இது தவிர அருணாச்சல பிரதேசம் மீதும் சீனா தொடர்ந்து உரிமை கோரி வருகிறது. தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வரும் சீனாவின் நடவடிக்கையை அவ்வப்போது மத்திய அரசும் கண்டித்துள்ளது. இப்போது இருநாட்டு எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சீனாவின் அடுத்த நடவடிக்கை உள்ளது. அருணாச்சல பிரதேச எல்லையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் சீனாவுக்கு சொந்தமான இடத்தில் புதிய ஹெலிகாப்டர் தளத்தை அமைத்து வருகிறது.