மாற்றங்கள் என்னென்ன? மசோதா லோக்சபாவில் தாக்கல் | New Income Tax Bill | Parliament | Nirmala Sitharam
பிப்ரவரி 1ல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவித்தார். இதை தொடர்ந்து புதிய வருமான வரி மசோதாவுக்கு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது. இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். பின் அவர் பேசுகையில் எளிமையான நடைமுறைகளுடன் அனைவருக்கும் புரியும் வகையிலும் இருக்கும். புதிய சட்டம் மூலம் வரி தொடர்பான சர்ச்சைகள் குறையும். பழைய சட்டம் 800க்கும் மேற்பட்டப் பிரிவுகளைக் கொண்ட நிலையில், புதிய மசோதா 536 பிரிவுகளை மட்டுமே கொண்டுள்ளது. சொற்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது, பிரிவுகளும் அத்தியாயங்களும் குறைக்கப்பட்டுள்ளன என்றார். நாட்டில் நடைமுறையில் இருக்கும் வருமான வரிச்சட்டம் 1961ல் இயற்றப்பட்டது. புதிய மசோதா 536 பிரிவுகள், 622 பக்கங்கள், 23 அத்தியாயங்களை கொண்டுள்ளது. புதிய சட்டத்தில் வரி விகிதங்களில் மாறுதல் ஏதும் இல்லை. சட்டத்தை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதிப்பீட்டு ஆண்டு என்பது வரி ஆண்டு என மாற்றப்பட்டு உள்ளது. இந்த சட்ட மசோதா பார்லிமென்ட் நிதி நிலைகுழுவிற்கு அனுப்பப்படும். குழு தனது பரிந்துரைகளை வழங்கிய பின், அதில் திருத்தங்கள் செய்வது குறித்து அமைச்சரவை முடிவு செய்யும். பார்லி கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்று முடிந்துள்ளது. மார்ச் 10 அன்று இரண்டாவது அமர்வு துவங்கும் போது இந்த குழு மசோதா தொடர்பான அறிக்கையை சமர்பிக்கும். அடுத்த நிதியாண்டிலிருந்து இந்த புதிய வருமான வரி சட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.