அமைச்சர் நேருவால் மனமுடைந்த திமுக எம்எல்ஏ | DMK MLA | Soundarapandian | Minister Nehru
லால்குடி தொகுதி திமுக எம்எல்ஏ சவுந்தரபாண்டியன். தொடர்ந்து நான்காவது முறையாக எம்எல்ஏவாக உள்ளார். திருச்சியை சேர்ந்த அமைச்சர் நேருவின் தீவிர ஆதரவாளராக இருந்த இவருக்கும் அமைச்சர் நேருவுக்கும் இப்போது ஏழாம் பொருத்தமாக உள்ளது. அமைச்சர் நேரு, எம்எல்ஏ சவுந்தரபாண்டியனை தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளில் புறக்கணிக்க துவங்கியதால் அதிகாரிகளும், கட்சி நிர்வாகிகளும் அவரை ஒதுக்கினர். கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளுக்கு சவுந்தரபாண்டியன் அழைக்கப்படுவதில்லை. இரண்டு ஆண்டுகளாக இருவருக்கும் இந்த மோதல் போக்கு நீடித்து வருகிறது. லோக்சபா தேர்தலில், அமைச்சரின் மகன் அருண் போட்டியிட்டதால் சில நாட்களுக்கு சவுந்தரபாண்டியனை அனுசரித்து சென்றுள்ளார். தேர்தல் முடிந்ததும் மீண்டும் சவுந்தரபாண்டியனை உதாசீனப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.