உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நண்பருடன் சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி

நண்பருடன் சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி

நண்பருடன் சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி ராமநாதபுரம், பரமக்குடி அருகே ஓட்டப்பாலத்தை சேர்ந்தவர் 36 வயதான ரஜினி. நண்பர் பாண்டியுடன் பரமக்குடியில் இருந்து மதுரைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். தெளிச்சாத்தநல்லூர் அருகே வந்தபோது, ரஜினி பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியது. வலியில் அவர் துடித்தபோது, பைக்கில் இருந்து இருவரும் நிலைதடுமாறி விழுந்தனர். விபத்தில் படுகாயமடைந்த ரஜினி ஸ்பாட்டிலேயே இறந்தார். பாண்டி பலத்த காயத்துடன் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். பரமக்குடி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஜூலை 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை