ஆசிரியர்கள் வராததால் வீட்டுக்கு திரும்பும் மாணவர்கள் Teachers Protest
ஆசிரியர்கள் வராததால் வீட்டுக்கு திரும்பும் மாணவர்கள் Teachers Protest| Kundrathur School Closed | DPI | 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று தொடங்கிய முற்றுகைப் போராட்டம் நாளை வரை நடக்கிறது. போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். தமிழகம் முழுதும் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொளள சென்னைக்கு செல்கின்றனர். இதனால் பல பள்ளிகள் செயல்படவில்லை. ஆசிரியர்கள் வராததால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை அடுத்த குன்றத்துார் அரசு தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களில் ஒருவர்கூட பள்ளிக்கு வராததால், பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவர்கள் வீடு திரும்பினர்.