உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சாலையோரத்தில் காத்திருந்து அஞ்சலி செலுத்திய மக்கள் wayanad| land slide| pandalur

சாலையோரத்தில் காத்திருந்து அஞ்சலி செலுத்திய மக்கள் wayanad| land slide| pandalur

கேரளாவின் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 280ஐ தாண்டிவிட்டது. நிலச்சரிவில் சிக்கி அடித்து செல்லப்பட்டு, நிலம்பூர் சாலியாறு மற்றும் கருளாயி வனத்தில் புதைந்த 39 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு மேப்பாடி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்களில் கொண்டு செல்லப்பட்டன. நீலகிரி மாவட்டம் பந்தலூர் வழியாக ஆம்புலன்ஸ்கள் வரிசையாக சென்றபோது, சாலையோரத்தில் காத்திருந்த மக்கள், ஆம்புலன்ஸ்கள் மீது மலர்களை தூவி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஆக 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !