Map-ல் இருந்தே அழிந்த முண்டக்கை-உலுக்கும் காட்சி | wayanad landslide | Mundakkai landslide videos
Map-ல் இருந்தே அழிந்த முண்டக்கை-உலுக்கும் காட்சி | wayanad landslide | Mundakkai landslide videos கேரள மாநிலம் வயநாடு முண்டக்கை, சூரல்மலையில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. மரணம் எண்ணிக்கை 280-ஐ தாண்டி விட்டது. மூன்றாவது நாளாக மீட்பு பணி நடக்கிறது. சூரல்மலையில் மீட்பு பணி முடிந்து விட்டது. வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டதால் முண்டகையில் முழு வீச்சில் மீட்பு பணியை துவங்குவதில் சிக்கல் இருந்தது. நேற்று காலை முதல் இன்று காலை வரை தற்காலிக பாலம் அமைக்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டது. தற்காலிக பாலம் போட்டு முடித்ததும் பொக்லைன் உள்ளிட்ட முக்கிய இயந்திரங்கள், மீட்பு கருவிகள் முண்டகைக்கு எடுத்து செல்லப்பட்டன. நிலச்சரிவு துயரம் நடந்து சரியாக இரண்டரை நாள் கழித்து இப்போது தான் முண்டகையில் முழு வீச்சில் மீட்பு பணி துவங்கி இருக்கிறது. முண்டகையில் இப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.