ஒரே இரவில் வெள்ளக்காடான புதுச்சேரி | Puducherry Rain | Heavy Rain in Puducherry
ஒரே இரவில் வெள்ளக்காடான புதுச்சேரி | Puducherry Rain | Heavy Rain in Puducherry மிக கன மழை பெய்யும் என்று வானிலை எச்சரித்த நிலையில் இரண்டாவது நாளாக நேற்று இரவு புதுச்சேரியில் கன மழை கொட்டி தீர்த்தது. இரவு 9 முதல் 12 மணி வரை மழை வெளுத்ததில் புதுச்சேரி நகரம் முழுதும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. புஸ்சி வீதி,அண்ணா சாலை, நேரு வீதி, காந்தி வீதி, லாஸ்பேட்டை, என பல பகுதிகளில் நீர் ஆறாய் ஓடியது. இரவில் வீட்டிற்கு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தத்தளித்தனர். பல வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் தூக்கம் தொலைத்தனர். லாஸ்பேட்டை ஜீவானந்தபுரத்தில் தட்டாஞ்சாவடி ஓடை அருகே கரை புரண்ட வெள்ளத்தில் ஐயப்பன் என்பவர் இழுத்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற சென்ற 2 பேரும் ஓடைவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அப்பகுதியை சேர்ந்தவர்கள் இருவரை மீட்ட நிலையில் ஐயப்பன் மட்டும் மாயமாகினார். தொகுதி எம்எல்ஏ வைத்தியநாதன் நேரில் வந்து தேடுதல் பணியை தீவிரப்படுத்தினார். விடிய விடிய தேடியும் அவர் கிடைக்காததால் கொக்கு பார்க் பகுதியில் உள்ள வாய்க்காலில் தேடி வருகின்றனர். 24 மணி நேரத்தில் 15 புள்ளி 5 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.