உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மக்கள் போராட்டத்தால் ஒப்பந்ததாரர் மீது போலீஸ் வழக்கு | Mayiladuthurai | project manager Arrest

மக்கள் போராட்டத்தால் ஒப்பந்ததாரர் மீது போலீஸ் வழக்கு | Mayiladuthurai | project manager Arrest

மக்கள் போராட்டத்தால் ஒப்பந்ததாரர் மீது போலீஸ் வழக்கு | Mayiladuthurai | project manager Arrest மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் எலந்தங்குடி பகுதியில் பாலம் கட்டும் பணி நடக்கிறது. வழுவூரை சேர்ந்த எலக்ட்ரீசியன் மணிகண்டன் வயது 26, விவசாய தொழிலாளர்களுக்கு உணவு வாங்க டூவீலரில் சென்று கொண்டிருந்தார். பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக்குடன் விழுந்தார். பள்ளத்தில் நீட்டிக்கொண்டு இருந்த கம்பி மணிகண்டனின் தலை மற்றும் உடலில் குத்தியது. சம்பவ இடத்திலேயே மணிகண்டன உயிரிழந்தார். ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் கொதித்து எழுந்தனர். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமலும், போர்டு கூட வைக்காமலும் வேலை பார்த்த ஒப்பந்ததாரர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய கோரி மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தினர். பிறகு, மணிகண்டனின் தந்தை இளங்கோவன் அளித்த புகாரின்பேரில், ஒப்பந்ததாரர் கண்ணன், சப் கான்ட்ராக்டர் சரவணன், ப்ராஜெக்ட் மேனேஜர் நாகராஜன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில், நாகராஜன் கைது செய்யப்ப்ட்டார். மற்றவர்களை தேடி வருகின்றனர். போலீஸ் நடவடிக்கை எடுத்த பிறகே, மக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆக 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை