கருணாநிதி சமாதியில் நடந்த சுவாரஸ்சியம்
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், கருணாநிதி சமாதியில் மரியாதை செலுத்தினார். அப்போது, கனிமொழி எம்பி, மத்திய அமைச்சர் முருகனுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை முதல்வர் ஸ்டாலின் முன்னால் வந்து நிற்குமாறு அழைத்தார். அவரும் 2 அடி முன்னே வந்து நிற்க; இன்னும் முன்னாடி வாங்க என்று ஸ்டாலின் அழைத்து பக்கத்தில் நிற்க வைத்தார்.
ஆக 18, 2024